சீமான் மீது நடிகை விஜயலட்சுமியின் புகார்...போலீஸார் விசாரணை

வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (19:19 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் இதுபற்றி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

விஜய் சூர்யா நடித்த பிரண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.

இவர் சீமானை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ''என்னை சீமான் திருமணம் செய்தது உண்மைதான் என்றும் அவரால் அவமானப்பட்டு இங்கு வந்து நிற்கிறேன்'' என்றும் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்திருந்தார்.

மேலும் ''நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும்'' என்று அவர் புகார் அளித்திருந்தார். சமீபத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது, கண்ணீர் விட்டு அழுத சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த  நிலையில்,  நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரின் அடிப்படையில், கோயம்பேடு துணை ஆணையர் உமையாள், ராமாபுரம் காவல் நிலையத்தில் வைத்து   நேரடி விசாரணை செய்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்