நடிகர் சிவா நடிக்கும் தமிழ்படம் 2.0 டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசர் வீடியோவில், துப்பாக்கி, மெர்சல், விவேகம், விஐபி, ஆம்பள் உள்ளிட்ட பல படங்களை கிண்டலடித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும், நடிகை கஸ்தூரி ஒரு குத்தாட்டப் பாடலில் நடனம் ஆடியுள்ளார். அது தொடர்பான காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது.
இந்நிலையில், தாயான பிறகு ஐட்டம் டான்ஸ் ஆடுவது சரியா? என ஒரு ரசிகர் கஸ்தூரியின் டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி “இந்த மனநிலைதான் மாற வேண்டும். கவர்ச்சியாக இருக்கும் பெண் அறிவுடையவளாக இருக்க மாட்டாள். அவள் தாய்மைக்கு தகுந்தவள் அல்ல. நல்ல பெண் அல்ல என்கிற எண்ணம் இங்கு பலருக்கும் இருக்கிறது.