கலாமிற்கு மாலை போடும் அருகதை இவர்களுக்கு கிடையாது - விஷால் விளாசல்

வியாழன், 21 செப்டம்பர் 2017 (19:32 IST)
தமிழக அரசியல்வாதிகள் பற்றி ஒரு காட்டமான கருத்தை நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு விஷால் பேட்டியளித்தார். அப்போது அனிதாவின் தற்கொலை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால் “தற்கொலை செய்து கொள்ளுபோது அனிதா எவ்வளவு வலியுடன் இருந்திருப்பாள் என நினைத்தால் வேதனையாக இருக்கிறது. அனிதாவின் இடத்திலிருந்து யோசித்தால்தான் அந்த வலி தெரியும். 
 
அனிதா மாதிரியான குழந்தைகளை கனவு காணச்சொன்ன அப்துல்கலாமை இந்த அரசியல்வாதிகள் கொச்சைப்படுத்திவிட்டனர். மத்திய, மாநில அரசியல்வாதிகள் யாரும் இனிமேல் அவருக்கு மாலை போடக்கூடாது. அஞ்சலி செலுத்தக்கூடாது. அந்த அருகதை அவர்களுக்கு கிடையாது” என காட்டமாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்