அகில இந்திய ஃபார்வேர்ட் பிளாக் மத்திய செயற்குழு கூட்டம் கல்கத்தாவில் நடைபெற்றது. எப்பொழுதும் போல் பொதுச் செயலாளராக கதிரவன் தொடர்வார் என்று அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி குறித்து கதிரவன் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி சம்பந்தமாக விரைவில் முடிவு எடுக்கப்படும்.
நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பது குறித்த கேள்விக்கு:
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் நிச்சயம் ஒரு தொகுதி கேட்டு அதில் போட்டியிடுவோம்.
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் புதிய யணிகள் குறித்த கேள்விக்கு:
ஏற்கனவே தமிழக அரசு இமானுவேல் சேகரனுக்கு அறிவித்துள்ளது அதேபோல் இதை அறிவித்துள்ளார்கள். இது குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் என்னிடம் இதற்கு முன்னதாகவே தெரிவித்தார். நாங்கள் ஒரு சில திட்டங்கள் வைத்துள்ளோம் உங்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்று சொன்னார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு:
ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று முதலில் நாங்கள் தான் குரல் கொடுத்தோம். பாமகவினர் கேட்கிறார்கள். நாங்களும் கேட்கிறோம் எங்கள் ஜாதியினரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் முக்கிய கோரிக்கை.
டி என் டி ஜாதி சான்றிதழ் வழங்குவதில் உள்ள குளறுபடி குறித்த கேள்விக்கு:
மாநிலத்திற்கு எம்பிசி சான்றிதழும் மத்திய அரசு பணிக்கு டிஎன்டி என்று கொடுப்பது முற்றிலும் தவறானது. மத்திய அரசில் இருந்து கொடுக்கப்படும் டிஎன்டி சலுகை இதுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கு நாடகம் ஆடுகிறார்கள்.
இந்தத் தேர்தலில் நாங்கள் லேசில் விடமாட்டோம் ஒரு (டிஎன்டி)சான்றிதழை வழங்குபவர்களுக்கு தான் நாங்கள் ஆதரவு கொடுப்போம்.
நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு:
இந்த ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம். ஆனால் நடிகர் விஜய் தற்போது சினிமாவில் பிஸியாக உள்ளார் எனவே அரசியலில் அவசரப்பட்டு விட்டார் என்று நினைக்கிறேன். கட்சியை வளர்க்க நினைப்பது தவறில்லை ஆனால் இந்த வயதில் வர வேண்டும் என்று அவசியம் இல்லை என்பதுதான் ஃபார்வேர்ட் பிளாகின் கருத்து என அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன் கூறினார் .