ஜல்லிக்கட்டுக்கு ரூ.1 கோடி கொடுத்த நடிகர் லாரன்ஸின் நெகிழ்ச்சி செயல்!!

வெள்ளி, 20 ஜனவரி 2017 (13:05 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள், மாணவ-மாணவிகள் தொடர் புரட்சி செய்து வருகிறார்கள். 


 
 
இந்நிலையில், மெரினா கடற்கரைக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்த நடிகர் ராகவா லாரன்ஸ் புரட்சியாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினார். மேலும் புரட்சியாளர்களின் உணவு, மருந்து செலவுக்காக ரூ.1 கோடி அளிப்பதாக அறிவித்தார்.
 
இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக மெரினா கடற்கரையில் போராடி வரும் பெண்களுக்காக கழிவறையுடன் கூடிய 5 கேரவன்களை அனுப்பி வைத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். 
 
மெரினாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் கழிப்பறை வசதி இல்லாமல் கஷ்டப்படுவதை ராகவா லாரன்ஸ் உணர்ந்தார். எனவே, இந்த ஏற்பாட்டை செய்துள்ளார்.
 
கேரவன்களுடன் சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் அங்கு வந்து அவற்றை ராகவா லாரன்ஸ் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார். மெரினா கடற்கைரைக்கு வந்தபோது பெண்கள் படும் பாட்டை பார்த்த ராகவா லாரன்ஸ் சிவலிங்கா படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த 5 கேரவன்களை அனுப்பி வைத்துள்ளார் என்று தயாரிப்பாளர் தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்