ஜெயலலிதா சமாதிக்கு இரவில் வந்து அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்! (வீடியோ இணைப்பு)

புதன், 7 டிசம்பர் 2016 (09:27 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. நேற்று இரவு பிரபல தமிழ் நடிகர் அஜித் அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். கூடவே அவரது மனைவி ஷாலினியும் வந்தார்.


 
 
உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவ போராட்டத்துக்கு பின்னர் நேற்று முன்தினம் இறந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல மாநில முதல்வர்கள், பிரதமர், குடியரசு தலைவர், நடிகர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
 
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பை பெற்ற பிரபல நடிகர் அஜித் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் உடனடியாக இங்கு வர இயலவில்லை இரங்கல் மட்டும் தெரிவித்தார்.

நன்றி: Viral Video
 
இதனையடுத்து நேற்று இரவு சென்னை திரும்பிய நடிகர் அஜித் உடனடியாக தனது மனைவி ஷாலினியுடன் மெரினா பீச்சில் எம்.ஜி.ஆர். சாமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்