தி.மு.க பிரமுகரின் கிட்னி சிகிச்சைக்கு உதவிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சரின் செயல் !

செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (18:52 IST)
தி.மு.க பிரமுகரின் கிட்னி சிகிச்சைக்கு உதவிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சரின் செயல் ! அரசு மருத்துவக்கல்லூரியின் டயாலிசீஸ் முறையில் தீவிர குணமடைந்த தி.மு.க பிரமுகர்

கரூர் அடுத்த வெங்கமேடு செங்குந்தர் நகர் இரண்டாவது கிராஸ் பகுதியினை சார்ந்தவர் விஜய் ஆனந்தகுமார், இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்சினையில் தவித்து வந்த நிலையில் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அந்த தனியார் மருத்துவமனையானது இங்கு குணப்படுத்த முடியாது, ஆகவே கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒப்புதல் கொடுத்தனர். இந்நிலையில் இவரது இரண்டாவது மகள் தர்ஸினி தனது செல் போன் மூலம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தந்தைக்கு இது போல ஆனது குறித்து எடுத்துக்கூறினார்.

இதனையடுத்து கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தகவல் தெரிந்தது. இந்நிலையில் அவருக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்த நிலையில், கொரோனா தொற்று வைரஸ் சிகிச்சையிலும் அங்குள்ள மருத்துவர்கள் மனிதாபிமான அடிப்படையில், சிறுநீரக சிகிச்சை குறித்தும், டயாலிசீஸ் முறையினை கொண்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று அவர் தற்போது குணமடைந்து வந்தார்.

இந்நிலையில், தமிழக அளவில் அவரது இரண்டாவது மகள், தர்ஸினி, என் அப்பா தி.மு.க பிரமுகர் ஆக இருந்தாலும், அவருக்கு இங்குள்ள தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி கைவிட்டும், இங்குள்ள அதிமுக செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனிதாபிமான அடிப்படையில் மனமுவந்து சிகிச்சை அளித்ததற்கு நன்றி தெரிவித்த வீடியோ வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்குகளில் வந்ததையடுத்து, தி.மு.க வினர் என்று தெரிந்தும் அவருக்கு உதவாத கரூர் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, செய்ய உதவாத நிலையில், தாமே உதவ முன்வந்து மனிதாபிமான முயற்சிக்கு அக்குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்