தேனியில் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் விபத்து - 5 பேர் படுகாயம்

புதன், 23 ஏப்ரல் 2014 (12:14 IST)
தேனி மக்கவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட விபத்தால் 5 பேர் படுகாயமடைந்தனர்.
 
நேற்று நடந்த இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தேனி மக்களவை தோகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார், அவருடன் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் பேரணியாகச் சென்றனர்.
 
பேரணி, ஓ.பன்னீர்செல்வத்தின் பிரச்சார வாகனத்தை அதிமுக கொடிகளுடன் பின் தொடர்ந்து சென்றது. இதில், உத்தமபாளையத்தை சேர்ந்த சாகுல்ஹமீது ஓட்டிய இருசக்கர வானத்தில், தேவாரத்தை சேர்ந்த பிரபஞ்சன் வண்டியின் பின்னால் அமர்ந்திருந்தார்.
 
இவர்களை தொடர்ந்து தேவாரத்தை சேர்ந்த விவேக் என்பவர் வந்து கொண்டிருந்தார். இவர்கள் காக்கில் சிக்கையன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், வந்த போது அவ்வழியாக சென்ற ஆட்டோ மீது மோதினர்.
 
இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டிவந்த சாயாத்தா, ஆட்டோவில் பயணம் செய்த சையது அபுதாகீர், இளைஞர் பாசறையை சேர்ந்த சாகுல்ஹமீது, மற்றும் விவேக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்