கள்ளக்காதலை விட முடியவில்லை ; குழந்தைகளை கொலை செய்தேன் - அபிராமி வாக்குமூலம்
ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (16:15 IST)
கள்ளக்காதலனை மறக்க முடியாமல் தனது குழந்தைகளை கொலை செய்ததாக கைதாகியுள்ள அபிராமை வாக்குமூலம் அளித்துள்ளார்.
குன்றத்தூரில் விஜய் என்பவரின் மனைவி அபிராமி, தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் அவர் தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் செய்தி வெளியானது.
அபிராமியின் செல்போன் சிக்னலை வைத்து இன்று காலை நாகர்கோவிலில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அப்போது போலீசாருக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில் “குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்று நான் அடிக்கடி பிரியாணி சாப்பிடுவேன். அப்போது, அங்கு பில் போடும் சுந்தரம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் அடிக்கடி அந்த கடைக்கு சென்று பிரியாணி வாங்குவேன். எனவே, நாளடைவில் சுந்தரத்துடன் எனக்கு கள்ள உறவு ஏற்பட்டது.
இதை தெரிந்த என கணவர் என்னை கண்டித்தார். ஆனாலும் என்னால் சுந்தரத்தை மறக்க முடியவில்லை. எனவே, கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு சுந்தரத்துடன் சந்தோஷமாக வாழலாம் என நினைத்தேன். ஆனால், அன்று என் கணவர் வீட்டிற்கு வராததால் அவர் தப்பித்துவிட்டார். எனவே, குழந்தைகளை மட்டும் கொன்று விட்டு தப்பி சென்று விட்டேன்” என அவர் கூறியதாக செய்திகள் வெளியானது.
அவரின் கள்ளக்காதலன் சுந்தரத்தையும் போலீசார் கைது செய்துள்ளனர். நீதிபதி முன் ஆஜர்படுத்திவிட்டு அவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.