கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட மகள் - சுட்டுக் கொன்ற தந்தை

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (07:47 IST)
கள்ளக்தொடர்பு ஈடுபட்டு குடும்ப கௌரவத்தை சீர் குலைத்ததாக பெற்ற மகளையே தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்தவர் இக்பால். இவருக்கு பவுசியா என்ற மகள் இருந்தார். பவுசியாவிற்கு இம்ரான் என்பவருடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
 
இதனையறிந்த இக்பால், பௌசியா மற்றும் இம்ரான் மீது ஆத்திரம் கொண்டு அவர்களை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என திட்டமிட்டார். பின் பவுசியாவை தீவிரமாக கண்காணித்தனர். நேற்று பவுசியா இக்பாலை சந்திக்க சென்றார்.
 
பவுசியாவை பின்தொடர்ந்த இக்பால், இம்ரான் வீட்டில் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். குடும்ப கவுரவத்தை கெடுத்துவிட்டாயே என கூறியவாறே, இக்பாலும் அவரது உறவினர்களும் இம்ரானையும், பவுசியாவும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
இதனையடுத்து போலீஸார் இக்பால் உட்பட அவரது உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்