ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரியில் நீராடிய கல்லூரி மாணவர் உயிரிழப்பு

திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (12:12 IST)
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மேட்டூர் பகுதியில் காவிரி ஆற்றில் நீராடிய கல்லூரி மாணவரை தண்ணீரில் அடித்துச் சென்றதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


 
ஆடி மாதம் 18 ஆம் தேதி அடிப்பெருக்கு கொண்டாடுவது வழக்கம். அதன்படி, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இதற்காக, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் திறந்துவிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அனல்மின் நிலைய பாலம் அருகே நீராடிக்கொண்டிருந்த நங்கவல்லியைச் சேர்ந்த நாவேந்தன் என்பவரை தண்ணீர் அடித்துச் சென்றது. இதனால் அவர் உயிரிழந்தார்.
 
இவர், மேட்டூர் அரசு கலைக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பி.காம். படித்து வந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்