பாட்டுப் பாடியதால் கூலித்தொழிலாளி அடித்துக் கொலை

புதன், 25 ஏப்ரல் 2018 (08:32 IST)
செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் பாட்டுப் பாடியதால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை வேலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிவேல். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். காசிவேலுக்கு ஊர் ஊராகச் சென்று  குடை மற்றும் செருப்புகளைத் தைத்துக் கொடுப்பது தான் வேலை.
 
இந்நிலையில் அவர் விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்திருக்கும் சேஷா சமுத்திரம் கிராமத்துக்கு வேலை நிமித்தமாக சென்றுள்ளார். அன்றைய தினம் வேலை அதிகமாக இருக்கவே, ஊருக்கு திரும்பாமல்,  சேஷா சமுத்திரத்தின் சாலையோரத்திலே தங்கியுள்ளார். காசிவேல் சினிமா பாடல் ஒன்றை பாடியவாறே படுத்துக்கொண்டிருந்திருக்கிறார்.
 
அப்போது, அந்த வழியாக வந்த அய்யாசாமி என்பவர், காசிவேலிடம் “என்னைப் பார்த்து ஏன் பாட்டு பாடுகிறாய்?” என கேட்டிருக்கிறார்.  `நான் உங்களைப் பார்த்துப் பாடவில்லை என காசிவேல் பதிலளித்திருக்கிறார் . அதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில்  ஆத்திரமடைந்த அய்யாசாமி மரக்கட்டையை எடுத்து காசிவேல் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார்.

இதில் காசிவேல் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அங்கேயே இறந்துவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை காசிவேலின் உடலைக் கைப்பற்றி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய அய்யாசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்