இந்நிலையில் சங்கீதா தொடர்ந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சங்கீதா தனது தாயார் மற்றும் 3வது சகோதரியுடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். ஏற்கனவே அவர்கள் மீது கோபத்தில் இருந்த ரமேஷ், அவர்களைக் கண்டதும் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சங்கீதா, அவரது தாய் மற்றும் சகோதரியையும் வெட்டினார். இதில் சங்கீதா சம்பவ இடத்திலே பலியானார்.