கெட்ட வார்த்தையில் திட்டிய ஆசிரியை: தற்கொலைக்கு முயன்ற மாணவி

செவ்வாய், 30 அக்டோபர் 2018 (15:50 IST)
நாகர்கோவிலில் ஆசிரியை ஒருவர் மாணவியை கெட்ட வார்த்தையில் திட்டியதால் மனமுடைந்த அந்த மாணவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் புத்தேரி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். பள்ளிக்கு சென்ற அந்த மாணவியை  உதவி தலைமை ஆசிரியை கெட்ட வார்த்தையால் திட்டியதுடன் அடித்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் மனமுடைந்த அந்த மாணவி பள்ளியின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். படுகாயமடைந்த அந்த மாணவி தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
தங்கள் மகளின் தற்கொலை முயற்சிக்கு காரணமான அந்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அந்த மாணவியின் பெற்றோர் போராட்டம் நடத்திய நிலையில், போலீஸார் சம்மந்தப்பட்ட ஆசிரியை மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்