திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வந்த நிலையில் தற்போது அவர் விசாரணைக்கு ஆதரவாக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வரும் சனிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
6 ஆண்டுகளாக அவர் 1050 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் அளித்துள்ள நிலையில் அவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ஐந்து நாட்களாக வருமான வரித்துறை ரெய்டு செய்து பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
மேலும் கோடிக்கணக்கில் ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் விலை உயர்ந்த வெளிநாட்டு கடிகாரங்கள் உள்பட ஒரு சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.