சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

புதன், 17 ஆகஸ்ட் 2022 (08:07 IST)
சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் நிதி நிறுவன ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு ரூபாய் 30 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் சமீபத்தில் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை வடபழனி மன்னார் முதலி தெருவில் உள்ள நிதி நிறுவனத்தில் 7 பேர் கொண்ட கும்பல் பணத்தை கொள்ளை அடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது
 
ஊழியர்கள் தீபக், சஞ்சீவ் குமார் ஆகியோரை கத்திமுனையில் கட்டிப்போட்ட கொள்ளையர்கள் ரூபாய் 30 லட்ச ரூபாயை எடுத்துச் சென்று விட்டதாகவும் அந்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது 
 
பிரபல நிதி நிறுவனத்தில் 30 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்