7 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கு: குற்றவாளிக்கு 3 தூக்கு தண்டனைகள்!

செவ்வாய், 29 டிசம்பர் 2020 (19:25 IST)
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 3 தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே 7 வயது சிறுமி ஒருவரை கடந்த ஜூன் மாதம் ராஜா என்பவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் குற்றவாளி ராஜா என்பவரை கண்டுபிடித்து கைது செய்து வழக்கு பதிவு செய்தனர் 
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிரடியாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் குற்றவாளி ராஜாவுக்கு மூன்று மரண தண்டனை வழங்கி நீதிபதி அதிரடியாக தீர்ப்பளித்தார்
 
பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஒருவருக்கு மூன்று மரண தண்டனை வழங்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்