11 வயது பள்ளிச்சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த தலைமையாசிரியர்

வியாழன், 17 டிசம்பர் 2020 (08:39 IST)
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மையாகும்
 
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஒருவர் தன்னுடைய பள்ளியில் படித்த 11 வயதுக்கு உட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது 
 
இதுகுறித்து தெலுங்கானா மாநில போலீசார் விசாரித்தபோது சிறுமிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமானது. மேலும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என தலைமையாசிரியர் அந்த சிறுமியை மிரட்டி உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது
 
பள்ளியிலேயே பலமுறை அந்த சிறுமிகளுக்கு அவர் பாலியல் செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 40 வயதான அந்த தலைமை ஆசிரியர், தனக்கு மகள் வயது உள்ள 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தலைமையாசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்