நள்ளிரவில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற பெண் அதிகாரி சஸ்பெண்ட்!!! மதுரையில் பரபரப்பு

ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (11:47 IST)
மதுரையில் நள்ளிரவில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்கு சென்ற பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு அங்கு போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவ்வப்போது அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கண்காணித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள ஆவணங்களை மர்ம நபர் ஒருவர் எடுத்து சென்று நகல் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 
இதையடுத்து மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்திற்கு முன் குவிந்தனர்.
 
இதுகுறித்து மதுரை மக்களவை தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மதுரை ஆட்சி தலைவர் நடராஜன் அவர்களிடம் புகார் கொடுத்தார்.
 
பின்னர் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் கலால் வட்டாட்சியர் சம்பூர்ணம் அந்த அறைக்குள் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட கட்டிடத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட வேண்டும் என கோரிக்கை வழுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்