மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. திருவிழாவின் 11-ம் நாளான இன்று தேரோட்டம் இன்று காலை 5:30 மணிக்கு மேல் தொடங்குகிறது. இதற்காக கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேர்களில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் இன்று அதிகாலை எழுந்தருளினர்.
தீபாராதனைக்கு பிறகு காலை 5 : 45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் சுவாமி சுந்தரேசுவரர் , பிரியாவிடையுடன், உள்ள பெரிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.