இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகனும் சிவகங்கை தொகுதி எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் பிரதமர் மோடி குப்பைகளை அள்ளும் போது புகைப்படம் எடுக்கும் குழுவினர் குறித்த ஒரு புகைப்படம் இருந்தது. ஒருவர் குப்பை அள்ளியதை பலர் வீடியோ எடுப்பதாக கிண்டலுடன் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் சில நிமிடங்களிலேயே அந்த புகைப்படம் போலியானது என்றும் அது ஒரு வெளிநாட்டுக் குழுவினர் கடற்கரையை புகைப்படம் எடுக்க எடுத்த ஒரு பழைய புகைப்படம் என்றும் தெரியவந்தது. இதனை அடுத்து பாஜகவினர் மற்றும் நெட்டிசன்கள் கார்த்தி சிதம்பரத்தை வறுத்தெடுத்து வருகின்றனர். கார்த்தி சிதம்பரத்திற்கு ஏன் இந்த தேவை வேலை? என்று நெட்டிசன்கள் தற்போது அவரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.