வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதன், 13 செப்டம்பர் 2023 (10:00 IST)
வடமேற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதன் காரணமாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து தெற்கு ஓடிசா, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதேபோல் வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்