தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆபத்தா?? தொல்லியல் துறையினரின் அதிர்ச்சியூட்டும் தகவல்

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (15:57 IST)
1000 ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவிலுக்கு பெரிய ஆபத்து உள்ளதக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், 1000 ஆண்டுக்களுக்கு முன் தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் என்ற மன்னரால் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாகியும் இன்றும் உறுதியோடு நிற்கிறது. மேலும் இந்த கோவிலின் கோபுரத்தின் நிழல் தரையில் விழாதபடி, ஒரு அதிசய கட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். உலகில் பல நாடுகளிலிருந்தும் இந்த கோவிலை காண வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 9 ஆம் தேதி, தஞ்சை பெரிய கோவில் அருகிலுள்ள பூங்கா ஒன்றில் போர் போடப்பட்டது. பெரிய கோவிலை சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு போர் போடக்கூடாது என தொல்லியல் துறை அறிவித்திருந்தது. அதையும் மீறி போர் போட்டால், கூடிய விரைவில் தஞ்சை பெரிய கோவிலின் கட்டுமானம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தஞ்சை மாநகராட்சி சார்பாக, தஞ்சை கோவில் அருகிலுள்ள மாநகராட்சி பூங்காவில் 500 அடி ஆழதுளை கிணறு அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தொல்லியல் துறை சார்பில், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி பூங்காவில் தண்ணீரின்றி மரங்களும் செடிகளும் காய்ந்துவருவதால் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

தஞ்சை கோவில் அருகே போர் போடக்கூடாது என தொல்லியல் துறை எச்சரித்துள்ள நிலையில், மாநகராட்சியே இவ்வாறு ஒரு காரியத்தை செய்தது மக்களிடையே பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது. மேலும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலை பாதுகாப்பது நமது கடமை என பலரும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்