பள்ளி மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி மீது வழக்கு

செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (15:08 IST)
திருவண்ணாமலையில் பள்ளி மாணவன் ஒருவரை கல்லூரி மாணவி திருமணம் செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய திருமண சட்டத்தின்படி திருமணம் செய்ய வேண்டுமெனில் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் மைனர் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைப்பதை நாம் அன்றாடம் கேள்விபடுகிறோம். இதற்கு நேர்மாறாக திருவண்ணாமலையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
 
திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
 
இச்சம்பவம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் தங்கள் மகளை கடுமையாக கண்டித்துள்ளனர். 
 
இதனையடுத்து அந்த பெண், பள்ளி மாணவனை கூட்டிக்கொண்டு ஊரிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் அந்த காதல் ஜோடியை தேடிப்பிடித்தனர். பின்னர் பிளஸ்-2 மாணவனை சட்டத்திற்கு புறம்பாக திருமணம் கொண்டதால் அந்த பெண் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்