நாடெங்கும் பரவி இருக்கும் மிகப்பெரிய கொடிய நோய் ஜாதி. எதிலும் ஜாதி, எதற்கெடுத்தாலும் ஜாதி. இந்த ஜாதிக்கொடுமையால் ஜாதி மாற்று திருமணம் செய்யும் பல அப்பாவிகள் கொலை செய்யப்படும் அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. ஆணவக் கொலை செய்வோர் கடுமையாக தண்டனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரித்த போதிலும் யாரும் திருந்தியபாடில்லை.
இதனிடையே அந்த பெண் தனது கணவருடன் ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றார். செக்கப் முடித்த பிறகு வெளியே வந்த போது அந்த பெண்ணின் அப்பா அனுப்பிய ஆட்கள், அந்த பையனை இரும்பு ராடால் தலையில் பலமாக தாக்கினர். இதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலே பலியானார். மனைவி கண்முன்னே கணவன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.