தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

திங்கள், 5 ஜூலை 2021 (13:03 IST)
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 
 
ஆம், தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாம். அதாவது, சேலம், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்