சென்னையில் பிடிபட்ட 82 பாம்புகள்: வனத்துறை அதிகாரிகள் தகவல்

சனி, 13 நவம்பர் 2021 (20:53 IST)
சென்னையில் 82 பாம்புகள் பிடிபட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது என்பதும் இந்த வெள்ளம் காரணமாக பாம்புகள் நடமாடியது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் வீடுகளுக்குள் பாம்பு புகுந்ததாக புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பாம்புகளை பிடிக்க 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது 
 
இந்த குழுவினர் இதுவரை 82 பாம்புகளை பிடித்து உள்ளனர் என்றும் பிடிபட்ட பாம்புகளை வனப்பகுதியில் விட உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
 
சென்னையில் பிடிபட்ட 25 சாரப்பாம்பு, 8 மண்ணுளிப்பாம்பு, 20 நல்லபாம்பு, 20 தண்ணீர்பாம்பு, 9 கொம்பேரி மூக்கன் என  82 பாம்புகள் வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்