கால்வாயில் 8 மாத பெண் சிசு சடலம்! பெண் சிசுக்கொலையா? – மதுரையில் அதிர்ச்சி!

சனி, 4 நவம்பர் 2023 (16:47 IST)
மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை தாய் சேய் மகப்பேறு சிகிச்சை பிரிவில் நாள்தோறும் ஏராளமான கர்ப்பிணி தாய்மார்கள் அனுமதிக்கப்பட்டு மகப்பேறு நடைபெறுகிறது.


 
மேலும், இங்கு குழந்தைகளுடன் வரும் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயில் முன்பாக இருந்து சாலையோர கால்வாயில் இன்று காலை பெண் குழந்தை துணியில் சுற்றிய நிலையில்  கிடந்துள்ளது.

இதனை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், அரசு மருத்துவமனை காவல்நிலைய காவல்துறையினர் நேரில்வந்து கால்வாயில் கிடந்த பெண் சிசுவின் உடலை மீட்டனர்.

இதனையடுத்து, உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு  அனுப்பிவைத்து  விசாரணை நடத்திவருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை  பிறந்து 8  மாதம் ஆகியிருக்கலாம் என, தெரியவந்துள்ளது. எப்போதும் கண்காணிப்பில் உள்ள மாநகரின்  முக்கிய சாலையில் பெண் சிசுவை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை மையத்தில் ஒவ்வொரு கர்ப்பணி தாய்மார்களும் அனுமதிக்கப்படுவதில் தொடங்கி மகப்பேறு முடிந்து வீட்டிற்கு செல்லும் வரை முழுமையாக கண்காணிக்கப்படுவார்கள் இந்த நிலையில் குழந்தை எவ்வாறு வாய்க்காலில் வீசப்பட்டது என்ற சந்தேகத்தினா அடிப்படையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 10 மாதங்களாக அனுமதிக்கப்பட்ட குழந்தை பெற்ற தாய்மார்களின் விவரங்கள் காவல்துறையினர் மூலமாக சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

மதுரையில் பெண் குழந்தை வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் என்பது பெண் சிசுக்கொலையா என்ற அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மாநகரல் பல்வேறு பகுதிகளிலும் இது போன்று கடந்த சில மாதங்களாக  குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு பெண் குழந்தையின் உடல் மீட்கப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்