பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனருக்கு 70 ஆண்டுகள் சிறை
புதன், 13 டிசம்பர் 2023 (18:45 IST)
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசுப் பேருந்தில் செல்லும் பள்ளிச் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் கைதான நடத்துனருக்கு 70 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் இருந்து கோபி செல்லும் அரசுப் பேருந்தில் பள்ளிச் சிறுமிகள் 10 பேரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் நடத்துனர் சரவணன்(49) கைது செய்யப்பட்டார்.
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில், நடத்துனர் சரவணனுக்கு தலா 7 ஆண்டுகள் வீதம் 70 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.