சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா தொற்று பல உலக நாடுகளில் பரவியுள்ளது.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,045 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, 1,026,715 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 234 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழக அரசு மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்துவந்த நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 102 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே தற்போது தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில், முக்கியமாக 3684 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், 411 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்னும் 484 பேரின் சோதனை முடிவுகள் வெளிவரவில்லை எனவும், 7 பேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவும், 1590 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், வரும் ஏப்ரல் 14 வரை மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ள நிலையுள்ளது.
எனவே, தமிழக மக்களுக்கு உதவும் பொருட்டு கொரோனா தடுப்பு நிதிக்கு பலரும் உதவி செய்துவருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இதுவரை முதலமைச்சர் பொதுநிவாரண நிதியின் கீழ் ரூ.62.30 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.