ஜூன் 30ம் தேதி 600 - 700 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஓய்வு பெறுகின்றனர்; மாற்று ஏற்பாடு என்ன?

புதன், 28 ஜூன் 2023 (14:13 IST)
நாளை மறுநாள் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து வரும் 600 -700 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஓய்வு பெறப்போவது அடுத்து அவர்களுக்கு மாற்றாக என்ன ஏற்பாடு செய்யப்பட்டது என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர். 
 
ஏற்கனவே தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படும் பேருந்துகளில் ஓட்டுநர்கள் நடத்துநர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் நாளை மறுநாள் 600 முதல் 700 ஓட்டுநர்கள் நடத்துநர்கள் ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. ஓய்வு பெறுவோருக்கு பதிலாக புதிய பணியாளர்கள் நியமனம் எப்போது என்றும் அரசு பேருந்துகளை நம்பி இருக்கும் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரும் பாதிப்பு அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
எனவே அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக புதிய ஓட்டுநர்கள் நடத்துநர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்