ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க இதுவரை 5,500 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர் என தகவல்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
பொங்கலை ஒட்டி நடத்தப்படும் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு வழங்கியது. இதற்கான முன்பதிவு நேற்று 3 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க இதுவரை 5,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 3,900 காளைகள், 1,600 மாடுபிடி வீரர்கள் என 5,500 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.