500 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை.. இன்குபேட்டரில் 5 மாதங்கள்.. மருத்துவர்கள் சாதனை

Arun Prasath

ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (11:58 IST)
500 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை 5 மாதங்களாக இன்குபேட்டரில் வைத்து மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தப்பேட்டையை சேர்ந்த செல்வமணி-லதா தம்பதியருக்கு கடந்த மே மாதம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையின் எடை 580 கிராம் தான் இருந்தது. இதனால் பெற்றோர்கள், குழந்தையை காப்பாற்ற முடியாதா? என்ற கவலையில் இருந்தனர்.

இதனையடுத்து நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தை பிரிவில் அந்த குழந்தையை சேர்த்தனர். அங்கு 24 மணி நேரமும் கண்காணித்து குழந்தையை பராமரித்து வந்தனர். கிட்டத்தட்ட 5 மாதங்களாக செயற்கை சுவாச உதவியுடன் பச்சிளம் குழந்தை வளர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தையை மருத்துவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனால் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அக்குழந்தைக்கு ஜான்சி ராணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்