உதவி தொகை வாங்கித் தருவதாக மாணவர்களிடம் பல லட்சம் மோசடி- 5 பேர் கைது

செவ்வாய், 4 ஜூலை 2023 (13:44 IST)
கோவை, திருப்பூர், ஈரோடு | சேலம், உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவ மாணவிகளின் செல்போன் எண்ணை தெரிந்து வைத்துக் கொண்டு “ஸ்காலர்ஷிப்' வழங்கும் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் தங்களுக்கு கல்வி உதவி தொகை வந்து இருப்பதாகவும் , ஒரு குறிப்பிட்ட பணத்தை நீங்கள் அனுப்பினால் நாங்கள் கல்வி உதவித் தொகையை உங்கள் வங்கி கணக்கில் அனுப்பி விடுவோம் என்று கூறினார்கள். இதை நம்பி ஏராளமான மாணவ மாணவிகள் பணத்தை அனுப்பி வைத்தனர். பின்னர் இது மோசடி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். 
 
போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து நாமக்கல் மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த டேவிட் (வயது 32 ) லாரன்ஸ் ராஜ் ( வயது 28) ஜேம்ஸ் ( வயது 30) எட்வின் சகாயராஜ் (வயது 31)மாணிக்கம் ( வயது 34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் டெல்லியில் தங்கி யிருந்து அங்குள்ள மோசடி கும்பலுடன் தொடர்பு வைத்து இந்த நூதன மோசடியை நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. இந்த கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரையும்  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதற்கான உத்தரவு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர்களுக்கு  வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்