தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை- வானிலை ஆய்வு மையம்
வெள்ளி, 20 மே 2022 (17:30 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், புதுவை மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்கலில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.