காணும் பொங்கலுக்கு வெளியே செல்லும் மக்கள்! – சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள்!

செவ்வாய், 17 ஜனவரி 2023 (08:53 IST)
இன்று காணும் பொங்கலுக்கு மக்கள் பலரும் சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதால் சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் பொங்கல், மாட்டு பொங்கலை தொடர்ந்து இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் திருமணமாகாத கன்னி பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவதால் கன்னி பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. காணும் பொங்கலில் உறவினர்களை சென்று சந்திப்பதும், வெளியூர்களுக்கு அல்லது சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதும் வழக்கம்.

சென்னையில் உள்ள மக்கள் பலரும் காணும் பொங்களில் மெரீனா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கும், மகாபலிபுரம் போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு செல்வது வழக்கம். இன்று மக்கள் அதிகமாக பயணிப்பார்கள் என்பதால் மெரினா கடற்கரை, கோவளம் கடற்கரை, பெசண்ட் நகர் கடற்கரை மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகராட்சி போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்