போகிக்கு கொளுத்திடாதீங்க.. இங்க குடுங்க! – 100 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பறிமுதல்!

வெள்ளி, 13 ஜனவரி 2023 (09:35 IST)
போகியை முன்னிட்டு பலரும் பழைய பொருட்களை கொளுத்தும் நிலையில் சென்னையில் 100 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு முதல் நாளான போகி அன்று மக்கள் வீடுகளை சுத்தம் செய்வதோடு பழைய பொருட்களை தீயிலிட்டு எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இதனால் சுற்றுசூழல் சீர்கேடு அடைவதால் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

பல பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர்களை எரிப்பது காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், கடந்த 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை சுமார் 100 மெட்ரிக் டன் அளவிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்