4,136 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு..!

ஞாயிறு, 19 மார்ச் 2023 (11:09 IST)
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4,136 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 
 
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் காலியாக உள்ள 4,136 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 
 
இதனை அடுத்து வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 14-ஆம் தேதி வரை தகுதியானவர்கள் இந்த உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 
 
எனவே தகுதி வாய்ந்தவர்கள் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்