மக்களே உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை!

திங்கள், 9 மே 2022 (11:23 IST)
சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு. 

 
இந்தியா முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. பல மாநிலங்களில் வெப்ப அனல் காற்று காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற நிலையில் அதற்கு அசானி என பெயரிடப்பட்டது.
 
தற்போது அசானி புயல் தீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த புயலானது நாளை ஒடிசா மற்றும் ஆந்திர கடற்கரையோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
நாளை முதல் 3 நாட்களுக்கு கடலோர ஒடிசா பகுதிகளில் மிக கனமழைக்கும், வட கடலோர ஆந்திர பகுதிகளில் நாளை மாலையும் மிக கனமழைக்கு வாய்ப்பு. தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்