கரூரில், நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாய மக்களின் உலகளாவிய சமுதாய நோன்பு விழாவான பிள்ளையார் நோன்பு விழா 38-ம் ஆண்டாக, கரூரில் உள்ள
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகரத்தார் சங்க தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பொருளாளர் குமரப்பன் முன்னிலையில் நடைபெற்றது. செயலாளர் மேலை பழநியப்பன் நோன்பின் மாண்பினை விளக்கிக் கூறி வரவேற்புரை ஆற்றினார்.
தொடர்ந்து வழிபாட்டிற்காக பக்தர்களால் வாங்கி வைக்கப்பட்ட உப்பு, தேங்காய், வாழைப்பழம், சர்க்கரை, கற்கண்டு, சட்டை, ஸ்கூல் பேக், மணமாலை, குபேரன், விளக்கு, பிள்ளையார் உள்ளிட்ட 25 பொருட்களை சமூக அற நிதித் திரட்டலுக்காக ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தினை செயலாளர், மேலை பழநியப்பன் ஏலம் நடத்தினார். இதில் ருசிகரமாக, உப்பு 1 கிலோ 53,000 ரூபாய்க்கும், மண மாலை 25 ஆயிரம் ரூபாய்க்கும், கற்கண்டு 1 கிலோ 4101, திருவிளக்கு 10 ஆயிரம் ரூபாய் என மொத்தம் சுமார் மூன்று லட்சத்து ஒரு ஆயிரம் ஏலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.