37 வயதில் எம்.பி.பி.எஸ் சீட்: தர்மபுரி பிரபுவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

சனி, 29 ஜனவரி 2022 (07:45 IST)
37 வயதில் எம்.பி.பி.எஸ் சீட்: தர்மபுரி பிரபுவுக்கு குவியும் வாழ்த்துக்கள்!
சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்து வரும் தர்மபுரியை சேர்ந்த 37 வயது பிரபு என்பவருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது.
 
 தர்மபுரியை சேர்ந்த 37 வயது பிரபு என்பவர் மஞ்சவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். அரசு பள்ளியில் படித்த இவர் மருத்துவராக வேண்டும் என்ற கனவை 37 வயதான பின்னரும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார் 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவருக்கு நேற்று கலந்தாய்வு செய்யப்பட்டது. அதில் அவருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது, அவர் பல் மருத்துவத்திற்கான படிப்பை தேர்வு செய்துள்ளார் என்பதும் திருச்செங்கோட்டில் உள்ள சுயநிதி கல்லூரிகளை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
 
தனியார் ஆய்வகத்தில் பணிபுரிந்து வரும் பிரபுவுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்