தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 3086 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 697,116 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3086 பேர்களில் 845 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,183 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் தமிழகத்தில் இன்று 4301 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 650,856 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 80348 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89,39,331 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது