பஞ்சாப்பில் 300 யூனிட் மின்சாரம் இலவசம்!

வெள்ளி, 1 ஜூலை 2022 (19:37 IST)
பஞ்சாப் மாநிலத்தில் வீடுகளுக்கு இன்று முதல் இலவச மின்சாரம் வழங்குவதற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மா நிலத்தில் சமீபத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதில், டெல்லியில் ஆட்சியைப் பிடித்ததுபோல் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியில்  டெல்லியில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இந்த நிலையில் தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததுபோல், ஜூலை 1 அம் தேதி முதல் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்மாநில நிதியமைச்சர் ஹர்பால் சிங் ,300 யூனிட் வரை வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதால் மாநில பட்ஜெட்டில் ரூ.1800 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்