தக்காளி சட்னியால் ஏற்பட்ட கைகலப்பு: 3 பேர் காயம்

புதன், 30 செப்டம்பர் 2015 (12:42 IST)
ஈரோட்டில் புரோட்டாவுக்குத் தொட்டுக் கொள்ள தக்காளி சட்டினி கேட்ட 3 பேரை கடை ஊழியர்கள் தக்கிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு, சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் குமார் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் ரகுநாதன், பாலசுப்ரமணியன் ஆகியோர் பெருந்துறை சாலையில் உள்ள கொங்கு புரோட்டா ஸ்டால் என்ற ஹோட்டலுக்கு புரோட்டா சாப்பிடச் சென்றனர். புரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சட்னி கேட்டனர்.  நீண்ட நேரம் ஆகியும் சட்னி வரவில்லை. இதனால் கோபம் அடைந்த அவர்கள் ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் தகராறு முற்றவே ஹோட்டல் ஊழியர்களான புதுக்கோட்டை விவேக், விஜயக்குமார், ராமநாதபுரம் ஆனந்த், ஈரோட்டைச் சேர்ந்த கோட்டைச்சாமி ஆகியோர் சாப்பிட வந்த 3 பேர் மீதும் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடினர். இதில் சம்பத்குமார் உள்ளிட்ட 3பேரும் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் தப்பி ஓடியவர்களை தேடியதில் விஜயக்குமார் தவிர மற்றவர்கள் சிக்கினர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்