கோவிலில் வழிபட அனுமதி மறுப்பு: 250 குடும்பத்தினர் இஸ்லாம் மதம் மாற முடிவு

புதன், 27 ஜூலை 2016 (03:26 IST)
வேதாரண்யம் அருகே கோவில் வழிபாட்டுக்கும் அனுமதி மறுகப்பட்டதால் 250 தலித் குடும்பத்தினர் இஸ்லாம் மதம் மாற முடிவு செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.


 

 
வேதாரண்யம் அடுத்த பழங்கள்ளிமேடு ஊராட்சியில் உள்ள தலித் மக்கள் கிராமத் தலைவர் ஆனந்தராசு தலைமையில் மாவட்ட கலெக்டர் பழனிசாமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
எங்கள் கிராமத்தில் சுமார் 450 தலித் குடும்பங்களும், 460 சாதி இந்து குடும்பங்களும் வசித்து வருகிறோம். இங்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபாட்டு உரிமையும், மண்டகப்படி உபயம் கேட்டு பல போராட்டம் நடத்தியும், அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் எங்களுக்கு எவ்வித உரிமையையும் வழங்கப்படவில்லை.
 
ஆகவே நாங்கள் இந்து என்று சொல்வதில் வெட்கப்படுகிறோம். பழங்கள்ளிமேட்டில் வசிக்கும் அனைவரும் சமூக நீதி காக்கப்படாத இந்து மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்