இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள் குறித்து தற்போது பார்ப்போம். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை, கடலூர், ராணிப்பேட்டை, அரியலூர், வேலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுவையில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது