இன்று 22 மாவட்டங்களில் கனமழை – எங்கெங்கு தெரியுமா?

புதன், 24 ஆகஸ்ட் 2022 (14:06 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 22 மாவடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாட்களாக பல மாநிலங்களிலும் நல்ல மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதனால் தமிழகத்தின் நீர்நிலைகள் பல நிரம்பியுள்ளன.

மேலும் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய உள்ளதாக வான்லை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.

மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி,நெல்லை, குமரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்