அப்போது யுவராஜ் மற்றும் கோபிநாத் ஆகிய இருவரும் அதிக மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், பொதுமக்களிடம் ஒழுங்கீனமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும், ஆபாச வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்ததால் ஆவேசம் அடைந்த கோபிநாத் என்ற காவலர் அறிவாலுடன் நடந்து சென்றதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், இரண்டு பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.