இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தடுப்பூசியில் முன்கூட்டியே 20 லட்சம் தடுப்பூசிகளை அவசரமாக வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே, தமிழகத்திற்கு இன்று மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து வருகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.