அடுத்த வாரம் 2 புயல்கள்; அதிர்ச்சியில் தமிழகம்

புதன், 4 அக்டோபர் 2017 (17:51 IST)
வங்கக் கடலில் அடுத்த வாரம் இரண்டு புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பொழிய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 


 
தென்கிழக்கு பருவ மழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கவுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவ மழை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை வரும் 26ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வடகிழக்கு பருவ மழை சராசரி அளவு 89 சதவீதம் முதல் 111 சதவீதம் வரை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
 
அடுத்த வாரம் வங்கக்கடலில் 2 புயல்கள் உருவாகும் என்றும், அந்த புயல்கள் நெல்லூரில் இருந்து கடலூருக்கு இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
 
மேலும் வடகிழக்கு பருவ மழையால் இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பை விடகொஞ்சம் குறைவான மழை பொழிவுதான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்